ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகையை ஃபேவரிட் நடிகையாக்கிக் கொண்டு, அவரை ட்ரெண்ட் செய்வது தமிழ் ரசிகர்களின் வழக்கம். லட்சுமி மேனன், ஸ்ரீ திவ்யா, மேகா ஆகாஷ் போன்ற நடிகைகள் இந்தப் பட்டியலில் அடங்குவர்.
இவர்கள் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான துவக்க காலத்தில், அவர்களை சமூக வலைதளங்களில் பெருமளவு ட்ரெண்ட் செய்து தங்களைது ஆதரவை வெளிப்படுத்தினர் தமிழ் ரசிகர்கள்.
இந்நிலையில் தற்போதைய ட்ரெண்ட் நடிகை அனு சித்தாரா. ஆனால் அவர் நடித்த
ஒரேயொரு தமிழ் படம் "பொது நலன் கருதி" என்ற படம் மட்டுமே வெளியாகியுள்ளது. அதிலும் அவர் பெரிதாக
கவனிக்கப்படவில்லை.
இந்நிலையில், இப்போது இவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளன. கடந்த வருடம் மட்டும் ஐந்து படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின்கண்களுக்கு விருந்து வைப்பது வழக்கம்.
அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றன.






