சிம்புவை இழுத்து போட்டு அடித்த யோகி பாபு - இரட்டை அர்த்த வசனங்கள் வழியும் "ட்ரிப்" - வெளியான டீசர் வீடியோ..!


யோகிபாபுவின் ‘ட்ரிப்’ படத்தை டெனிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்கி வருகிறார். யோகிபாபு உடன் கருணாகரன் மற்றும் சுனைனா நடித்துள்ள இந்த படத்தை சாய்பிலிம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த படத்திற்கு சித்துகுமார் என்பவர் இசையமைத்துள்ளார். உதயசங்கர் ஒளிப்பதிவில் தீபக் துவாரகநாத் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது . 

இந்தப் படம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட படம் என்பதால் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதில், இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பி வழிகின்றன. தேவையில்லாமல் சிம்புவை வேறு இழுத்து போட்டு அடித்திருக்கிறார்கள்.