நடிகர் விஜய் நண்பன் படத்தை என்னைத்தான் இயக்க சொன்னார்..! - போட்டு உடைத்த பிரபல இயக்குனர்..!


நடிகர் விஜய் என்னைத்தான் நண்பன் படத்தை முதன் முதலில் இருக்குமாறு கேட்டுக்கொண்டார் என நடிகரும், இயக்குனரமான பார்த்திபன் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்த்திபனிடம் ரசிகர் ஒருவர் நீங்களும், விஜய்யும் இணைந்தால் செம்ம மாஸாக இருக்கும் என கூறியிருந்தார். 

இதற்கு தன்னுடைய ஸ்டைலில் பதிலளித்துள்ளார் பார்த்திபன். அவர் கூறியுள்ளதாவது, மாஸ்க்கு மாஸ்டரை பிடிக்கும் மாஸ்டருக்கு இந்த நண்பனைப் பிடிக்கும்.

'நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார்-'அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார். நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும். என கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தின் ரிலீசுக்கு முன்பே "தளபதி65" படத்த்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்ற தகவல் வந்துள்ள நிலையில். ஒருவேளை, தளபதி65 படத்தை இயக்கப்போவது பார்த்திபன் தானா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.