ஆர்யா என்ன இப்படி மாறிவிட்டார் - போட்டோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள் - வைரல் புகைப்படம் இதோ


சினிமாவில் முன்னொரு காலத்தில் நடிக்கத் தெரிந்தால் அவர் நடிகர் என்று இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சிக்ஸ் பேக் இருந்தால் தான் நடிகர் என்றாகிவிட்டது. அந்தளவிற்கு அனைத்து நடிகர்களும் சிக்ஸ் பேக் கலாச்சாரத்திற்கு மாறி வருகிறார்கள். 

ஆனால் நடிகர் ஆர்யா தனது முதல் படம் முதலே தனது உடலை கம்பிரமாக வைத்திருக்கிறார். கடம்பன் படத்தில் கம்பீரமாக சிக்ஸ் பேக் பாடியில் தோன்றிய ஆர்யா பின் மகாமுனி படத்திற்காக தனது உடலை குறைத்தார். இப்போது மறுபடியும் தனது பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார். 

P.ரஞ்சித் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ள ஆர்யா. அந்த படத்திற்காக ஜிம்மில் எடுத்துக்கோடன சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இந்த புகைப்படத்தில் அவரது உடல் மிகவும் உறுதியாக இருப்பதைப் பார்க்கலாம். திரையில் வரும் போது நிச்சயம் மிரட்டலாகத்தான் இருப்பார்.