நடிகையும், மாடலுமான சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.
பிக்பாஸ் 3வது சீசனில், கவினை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அழகி சாக்ஷி வனிதாவின் அட்ராசிட்டியினால் இவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கவின் விஷயம் தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் இவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் தான்.
பட வாய்ப்புக்காக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஷாக்ஷி.
அந்த வகையில், தற்போது வித்தியாசமான லெதர் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் கார் சீட் கவர்-ல ட்ரெஸ்.. என்ன கொடுமை சரவணா இது என கலாய்த்து வருகிறார்கள்.





