சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தொலைக்காட்சி நடிகை தற்கொலை..!


சமீப காலமாக சின்னத்திரை நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதும், விவாகரத்து செய்து கொள்வதும், குடும்ப பாலியல் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதும் முன்பை விட அதிகமாக நடந்து வருகிறது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயற்சி செய்த விஷயம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த நிலையில். தற்போது, ஹிந்தி சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா தற்கொலை செய்து கொண்டார். 


கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெங்காலி தொலைக்காட்சி நடிகை சேஜல் சர்மா. நேற்று முன்தினம் இரவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மகளை பார்க்க வந்த பெற்றோர், அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


சின்னத்திரை தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சேஜல் சர்மா , திரைப்பட நடிகையாக வேண்டும் என்று விரும்பி பல இடங்களில் முயற்சி செய்த போதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

சினிமா வாய்ப்பு தேடும் படலத்தில் பல கசப்பான அனுபவங்களை அவர் சந்திக்க நேர்ந்தது என்றும் இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக சேஜல் சர்மா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சேஜல் சர்மா-வின் நண்பர்களும், குடும்பத்தாரும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தொலைக்காட்சி நடிகை தற்கொலை..! சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தொலைக்காட்சி நடிகை தற்கொலை..! Reviewed by Tamizhakam on February 18, 2020 Rating: 5
Powered by Blogger.