யோகிபாபுவை காதலித்த நடிகை - திருமணதிற்கு பின் அழுதுகொண்டே வெளியிட்ட வீடியோ - யோகி பாபு பதில்..!


நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து வருகிறார். இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்துவிட்டார். 

இந்நிலையில், சமீபத்தில் யோகிபாபுவின் திருமணம் அவர்களது சொந்த ஊரில் ரகசியமாக நடந்து முடிந்தது. திரையுலகத்தினர் பலருக்கும் தெரியாமல் மிக எளிமையாக திருமணம் செய்தார். 

ஆனால், யோகிபாபுவிற்கு திருமணம் நடந்த நாளன்று துணை நடிகை சுஜி என்ற ஒருவர், அழுதுபடி நான் யோகிபாபுவை ஒரு தலையாக காதலித்தேன் என அழுது டிக்டாக்-ல் வெளியிட்டிருந்தார். 

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இதுக்குறித்து யோகிபாபு ‘அந்த நடிகை யார் என்றே தெரியாது, அவரை நேரில் கூட நான் பார்த்தது இல்லை, அவர் வீடியோக்களை வெளியிட்டு வருவதால் என் குடும்பம் மட்டுமின்றி அவர் குடும்பத்திற்கும் பிரச்சனை’ என்று தெரிவித்தார். 

அதை தொடர்ந்து அந்த நடிகை ‘நான் தெரியாமல் அப்படி பேசிவிட்டேன், மன்னித்து விடுங்கள்’ என்று மறுபடியும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.