குட்டி ஸ்டோரி பாடலை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம் - யாரு இந்த பில் ட்யூக்..? - தேடும் தளபதியன்ஸ்..!
பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின்படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது.
கோடைவிடுமுறைக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்த இப்பாடலை அருண்ராஜா காமராஜ் பாடல் எழுதியிருந்தார்.
விஜயின் சொந்த குரலில் வெளிவந்த இந்த பாடல் வெளியான சிறிது நாட்களிலேயே 21 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த பாடலை ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான பில் டியூக் பாராட்டியுள்ளார். அவருக்கு லோகேஷ் நன்றி கூறியுள்ளார்.
பில் ட்யூக் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிப்பில் வெளியான பிரடேட்டர் மற்றும் கமாண்டோ
உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் பில் ட்யூக்.
சமீபத்தில் வெளியான நிக்கோலஸ் கேஜின் பனோஸ் காஸ்மடோஸ் மாண்டி படத்திலும்
நடித்துள்ளார். பழம்பெரும் நடிகரான இவர், தயாரிப்பாளராகவும், திரைக்கதை
ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
குட்டி ஸ்டோரி பாடலை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம் - யாரு இந்த பில் ட்யூக்..? - தேடும் தளபதியன்ஸ்..!
Reviewed by Tamizhakam
on
February 27, 2020
Rating:
