"ஒரு ஆணியும் **** முடியாது.." - விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரை பாருங்க.!


நடிகர் விஜய்க்கு வரும் சிக்கல்கள், அவரது படங்கள் வெளியாகும் போது ஏற்படும் பிரச்னைகள் எல்லாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எந்த மாதிரியான பிரச்சனையாக இருந்தாலும் விஜய்க்கு அவரது ரசிகர்கள் கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்து வருகிறார். 

காரணம், நடிகர் விஜய் தனது ரசிகர்களிடம் அந்த அளவுக்கு நம்பிக்கையை பெற்றுள்ளார். சமீபத்தில் கூட, விஜய்யின் மீது வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. 

இதற்கு காரணம் நடிகர் விஜய் தொடர்ந்து அரசை குத்திகாட்டும் விதமாக பேசுவதும், தன்னுடைய படங்களில் அரசின் திட்டங்களை எதிர்க்கும் விதமாக காட்சிகள் வைப்பதும் தான் என்று ஒரு தரப்பினர் கூறி அதனை அரசியலாக்கி விஜய் ரசிகர்களின் ஆதரவை பெற முயற்சி செய்து கேப்பில் கடா வெட்டினார்கள். 

இந்நிலையில், பிகில் படத்திற்கு விஜய்க்கு 50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது என பைனாசியர் சொன்னது தான் இந்த பிரச்னைக்கு காரணம் என்ற உண்மை வெளியானதால் இந்த பிரச்சனையில் இருந்து கமுக்கமாகி விட்டனர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள். 

இந்நிலையில், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மதுரை சோழவந்தான் பகுதியில் ஒரு போஸ்ட்டரை ஒட்டியுள்ளனர். அதில் "ஒரு ஆணியும் **** முடியாது.. தண்ணீல வளர்ந்த தவளை கூட்டம் அல்ல தளபதியின் அன்பால் வளர்ந்த பாசக்கூட்டம்" என குறிப்பிட்டுள்ளனர். 

மதுரையில் இருக்கும் இவர்கள் டெல்லியில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து சொல்கிறேன் பேர்வழி என்று விஜய்-யை முதலமைச்சர் ரேஞ்சுக்கு உயர்த்தி தலைமை செயலகத்தின் புகைப்படத்தை விஜய்க்கு கீழ் பிரிண்ட் செய்துள்ளனர்.


விஜய் அரசியலுக்கு வருவார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் அவரது ரசிகர்கள் இப்படி போஸ்டர்கள் ஓட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

"ஒரு ஆணியும் **** முடியாது.." - விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரை பாருங்க.! "ஒரு ஆணியும் **** முடியாது.." - விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரை பாருங்க.! Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.