சேனல் தொடங்கிய காலம் தொட்டு இப்போது ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள் பெருகி விட்ட நிலையிலும் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது சன் டிவி.
இந்தியளவில் TRP-யில் முதலிடத்தில் இருப்பது இந்த சேனல் தான். சன் நெட்வொர்க் குடையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 32-க்கும் மேற்பட்ட தொலைகாட்சி சேனல்களை நடத்தி வருகின்றது.
ஆனால், அதற்கு நேர் எதிராக விஜய் டிவியின் அசுர வளர்ச்சி ஆரம்பத்தில் சன் டிவியை கொஞ்சம் அசைத்து பார்த்தது. ஆனால், அதற்கு காரணமான நிகழ்சிகளை அப்படியே காப்பியடித்து மீண்டும் முதலிடத்திற்கு வந்தது சன் தொலைக்காட்சி.
மேலும், ஜீ தமிழ், கலர்ஸ் என பல சேனல்கள் வந்துள்ளது, ஆனாலும், சன் டிவி சீரியல் மூலம் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வருகின்றது. இந்நிலையில் சன் டிவியின் பிரபல தொகுப்பாளர்களான ஆதவன் மற்றும் மதுரை முத்து தற்போது விஜய் டிவிக்கு வந்துவிட்டனர்.
மிக விரைவில் ஆதவன், மதுரை முத்து, ஈரோடு மகேஷ் ஆகியோர்கள் இணைந்து கலக்கும் ஒரு காமெடி ஷோ வரவுள்ளதாம்.இப்படி ஒட்டு மொத்தமாக பிரபல கலைஞர்கள் அணி தாவியுள்ளது சன் தொலைகாட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.


