என்னடா இது சமுத்திரகனிக்கு வந்த சோதனை என்று தான் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகும் மீம்களை பார்த்தால் தோன்றும். அந்த அளவுக்கு எக்கச்சக்கமாக வச்சு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அடேய்.. யாராச்சும் சமுத்திரகனிய எதுக்கு கலாய்க்குறீங்கன்னு சொல்லுங்கடா என்று ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டு கிடக்கிறார்கள்.
பொதுவாகவே சமுத்திரகனி படங்களில் கருத்து கொஞ்சம் ஒவாரகவே இருக்கும். படத்தில் கருத்து சொல்வது ஒரு ரகம். கருத்துக்குள் படத்தை வைப்பது அடுத்த ரகம். இதில் சமுத்திரகனி இரண்டாவது ரகம். இவர் மட்டும் தான் இரண்டாவது ரகம் என்று கூட சொல்லலாம்.
ஆரம்ப காலத்தில் இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றன. ஆனால், சமீப காலமாக தன்னுடைய தனிப்பட்ட கருத்துகளை, தனிப்பட்ட அரசியல் விருப்பங்களை படத்திற்குள் வலுக்கட்டாயமாக திணித்து ரசிகர்களை மண்டை காய வைத்து விட்டார் சமுத்திரகனி.
அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு "நாடோடிகள் 2" திரைப்படம். இப்படி கருத்து கந்தசாமியாக வலம் வரும் சமுத்திரகனியின் சில வசனங்களை வைத்து சில அரை வேக்காடுகள் கொரோனா வைரஸ் குறித்து ஆறுதல் கூறுவது போல மீம்களை வெளியிட்டனர்.
படத்துல தான் இவரு தொல்ல தாங்கல.. இப்போ, கொரானாவுக்குமா..? என கடியான மீம் மாஸ்டர்கள் சமுத்திரகனி, சமுத்திர காய், சமுத்திர பூ, சமுத்திர கொட்டை, சமுத்திர வேர், சமுத்திர கிளி என்பதில் ஆரம்பித்து இப்போது சமுத்திர தீனியில் வந்து நிற்கிறது.
இது இன்னும் முடிந்த பாடில்லை சமுத்திரகனியின் முகத்தை மட்டும் எடுத்து உலகமே அவரு தான். அவர் இல்லையென்றால் உலகமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வஞ்சபுகழ்ச்சி மீம்களை "எட்டுத்திக்கும் பற"க்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.








