சீரியல் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் கவர்ந்தவர் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இனி வெள்ளித்திரையில் இவரை பல படங்களில் பார்க்கலாம், ஏனெனில் ஓ மை கடவுளே படத்தில் இவருடைய கதாபாத்திரம் எல்லோரையும் கவர்ந்தது.
இந்நிலையில், இந்த படத்தில் வாணி போஜன் செய்த வேலையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார் ஒரு வாலிபர். ஆம், சமீபத்தில் வாணி போஜன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் ஒரு காட்ட்சியில் இவர் ஒரு மொபைல் நம்பர் சொல்வார்.
அது உண்மையாகவே வாலிபர் ஒருவரின் போன் நம்பர் தானாம். தினமும் அவருக்கு 50 முதல் 60 பேர் போன் செய்து வாணி போஜனுடன் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றார்களாம்.
ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், அவர் படக்குழுவினர்கள் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளாராம். இந்த தகவல் கோலிவுட்டையும் மற்றும் படக்குழுவினர்களுக்கும் கண்டிப்பாக அதிர்ச்சியை கொடுத்திருக்கும்..



