தமிழ் சினிமாவில் பிரபல நடிகை மற்றும் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் இவர்.
சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத அவர் சமீபத்திய ஒரு பேட்டியில் தற்போது நடிகரும் இயக்குனருமான அமீரிடம் காரசாரமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
முன்னதாக,பாடகி சின்மயி #MeToo விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவாக குரல் எழுப்பினார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். அப்போது, இயக்குனர் அமீர் "நீங்கள் உங்கள் சாதியில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பீர்களா..?" என்று கிண்டலாக கேட்டிருந்தார்.
சமீப காலமாக இயக்குனர் அமீர் பல சர்ச்சையான விஷயங்களை பேசி வருகிறார். வெகு சமீபத்தில் கூட, " மனிதன் மிருகத்துடன் உறவு கொள்வது தவறு கிடையாது. மனிதனும் விரும்புகிறார், விலங்கும் விரும்புகிறது இதுவும் ஒருவகையான உணர்வு தானே இதனை நீங்கள் எப்படி தடுக்க முடியும் " என கூறி வலை வாசிகளிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.
இந்நிலையில்,லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நான் இஸ்லாமியர்களை பார்த்தா அஸ்லாம் அலைக்கும் என வணக்கம் சொல்லுவேன். ஆனால், அமீர் என்னை பார்க்கும் போது "ஸ்ரீ ராம ஜெயம்" கூறுவாரா.?.எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகின்றது.அமீர் போன்ற ஆட்களுக்கு என்னுடைய பின்புலம், அதாவது நான் சார்ந்திருக்கும் வகுப்பு தான் பிரச்சனை.என்று சுளீர்பதில் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவில், 11:14 க்கு சீக் செய்து பாருங்கள்.!
இந்த வீடியோவில், 11:14 க்கு சீக் செய்து பாருங்கள்.!


