டாப் ஸ்டார்டா..! - முன்னணி இயக்குனர் படத்தில் ஹீரோவான பிரஷாந்த்.! - எகிறி கிடக்கும் எதிர்பார்ப்பு..!


நடிகர் பிரஷாந்த் ஒரு காலத்தில் விஜய், அஜித்திற்கு கடும் போட்டியாக இருந்தவர். ஆனால், காலம் இவரை ஒரு வழியாக்கி விட்டது. ஆனாலும், சினிமாவில் இருக்கிறேன் என்று சொல்வதர்க்கவே வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வந்தார்.

ஆனால், எந்த படமும் இவரை அடுத்த ரவுண்டுக்கு தயாராக்கும் வகையில் இல்லை, இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த வித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. ஆனால், தற்போது அந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆம், சமீபத்தில் ஹிந்தியில் வெளியான படம் அந்தாதுன். இந்த படத்தின் பட்ஜெட் 32 கோடி ரூபாய் தான். ஆனால், உலகம் முழுதும் 456 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார். 

இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மோகன்ராஜா இயக்கிய வேலைக்காரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இவர் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்குவர் என கூறப்பட்டது.

ஆனால், நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் பிஸியாகி விட்டதால் பிரஷாந்த்-தை வைத்து அந்தாதுன் ரீமேக் படத்தை இயக்கவுள்ளார் என கூறுகிறார்கள். பிரஷாந்துக்கு இந்த கூட்டணி மட்டும் அமைந்து விட்டால் நம்ம டாப் ஸ்டார் மீண்டும் டாப்பில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என பொதுவான ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விஜய், அஜித்திற்கு போட்டியாக வர வேண்டும் என்றால் அவர்கள் போல ஹிட் படங்களை கொடுத்து சென்செஷனாக இருக்கும் முன்னணி இயக்குனர் படங்களில் நடியுங்கள் பிரஷாந்த் என பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.