"அமலா பால் நீங்க ரொம்ப.... " - மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் வெளிப்படையான கருத்து..!


இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து, பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர் நடிகை அமலாபால். சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவரை இரண்டாவது திருமணம் செய்ததாக சில புகைப்படங்கள் வௌியாகின. 

அதோடு இருவரும் உதட்டு முத்தம் கொடுத்த படங்களும் அதில் இடம் பெற்று இருந்தன. ஆனால் இதை அமலாபால் மறுத்தார். ஒரு போட்டோ ஷூட்டிற்காக அது எடுக்கப்பட்டது என தெரியவந்தது. 

இந்நிலையில், சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூலில், கவலைப்படாதீங்க அமலாபால், உங்கள் பஞ்சாபி கணவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வார். பஞ்சாபி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என பதிவிட்டு, அவரை வம்புக்கு இழுத்திருந்தார்.

இந்நிலையில், நடிகை அமலாபால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படத்திற்கு "Pretty Woman" என்று கமென்ட் செய்துள்ளார் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன்.

பொரும்பாலும், நடிகைகள் சக நடிகைகளை இப்படி அழகு என்று புகழ்வது எல்லாம் அரிதான விஷயம். ஆனால், மாளவிகா மோகனன் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

நடிகை அமலாபால், பூ வாசம் குறித்த தன்னுடைய சித்தாந்தை சின்ன கட்டுரையாக எழுதியுள்ளார். அதில், பூவின் வாசத்தை சிலர் புரிந்து கொள்வதில்லை என்றும், நாற்றம் என்று சிலர் ஒதுங்குவதாகவும் என்பதில் இருந்து பல உள்ளடக்க கருத்துக்களை அந்த பதிவு கொண்டிருக்கிறது. இதனை புரிந்து கொண்ட மாளவிகா மோகனன் நீங்க ரொம்ப அழகு என கருத்து தெரிவித்துள்ளார்.


"அமலா பால் நீங்க ரொம்ப.... " - மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் வெளிப்படையான கருத்து..! "அமலா பால் நீங்க ரொம்ப.... " - மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் வெளிப்படையான கருத்து..! Reviewed by Tamizhakam on April 01, 2020 Rating: 5
Powered by Blogger.