"சில்லுனு ஒரு காதல்" படத்தில் நடித்த ஷ்ரியா ஷர்மாவா இது..? - இப்படி குண்டாகி விட்டாரே..! - ரசிகர்கள் ஷாக்.!!


தெலுங்கில் ஜெய் சிரஞ்சீவா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு “சில்லுனு ஒரு காதல்” படத்தின் மூலம் தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயா சர்மா. 

இவருக்கு தனது சிறு வயதிலிருந்தே பெரிய நடிகையாக ஆகவேண்டும் என்று ஆசையாம். அதனால் தனது விடாமுயற்சியால் தெலுங்கில் “காயகுடு” என்ற படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக நடித்தார். முதல்படமே ஓரளவிற்கு ஓடியதால் மகிழ்ச்சியில் இருந்தார். 

அதன்பின் நாகர்ஜூனாவின் தயாரிப்பில் “நிர்மலா கான்வென்ட்” என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். ஸ்ரேயா ஷர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். 


ஆனால், இப்போதைக்கு படிப்பு தான் முக்கியம். நடிப்பை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என படிப்பை தொடர சென்று விட்டார் அம்மணி. ஆனால், எப்போதுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். 


அந்த வகையில் சமீபத்தில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயாவா இது என்று ஆச்சிரியத்தில் பார்க்கின்றனர். 

ஹீரோயினாக நடிக்க வந்த இவர் இப்படி குண்டாகிவிட்டாரே என்று கூறி வருகிறார்கள். இதையெல்லாம் ரசிகர்கள் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Previous Post Next Post
--Advertisement--