"விஜய்க்கு தாராள மனசு" - கொரோனா நிதியுதவி - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த முதலமைச்சர்..!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக மத்திய மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்ய விரும்புவோர் தாராளமாக தரலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இதையடுத்து பிரபலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் விஜய் ரூ. 1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளார். 

திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு 25 லட்சமும், கேரளாவுக்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா 5 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ ரசிகர் மன்றங்களுக்கும் நடிகர் விஜய் நிதியுதவி வழங்கியுள்ளார். 


இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் திரு.நாராயண சாமி அவர்கள் வீடியோ பதிவின் மூலம் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, புதுச்சேரியில் பல அழகிய இடங்கள் இருக்கிறது. எனவே பல நடிகர்களும் தங்கள் படப்பிடிப்பை புதுச்சேரியில் நடத்துகின்றனர். 

அவர்களுக்குத் தேவையான உதவிகளை நம் அரசு செய்கின்றது. இதனை மறக்காத விஜய் நமக்கு 5 லட்சம் வழங்கியுள்ளார். அவருக்கு என் நன்றி. அந்தப் பணத்தை மக்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். மற்ற நடிகர்களும் அவரை போல் முன்வந்து புதுச்சேரிக்கு உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.
"விஜய்க்கு தாராள மனசு" - கொரோனா நிதியுதவி - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த முதலமைச்சர்..! "விஜய்க்கு தாராள மனசு" - கொரோனா நிதியுதவி - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த முதலமைச்சர்..! Reviewed by Tamizhakam on April 23, 2020 Rating: 5
Powered by Blogger.