இதனால் தான் சிம்பு , பிரபுதேவை ப்ரேக்-அப் செய்தேன் - முதன் முறையாக போட்டு உடைத்த நயன்தாரா..!


தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை. 

இன்று சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா தனது சினிமா பயணத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தவர். சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். 

கிசுகிசு, வதந்தி, சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாதவர். அது தான் இத்தனை நாள் இவரை ஆக்டிவாக வைத்துள்ளது என்று கூட சொல்லலாம். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்துவருகிறார் நயன்தாரா. 

இந்நிலையில், தனது பழைய காதல்கள் குறித்து வாய் திறக்காத நயன்தாரா, தற்போது பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியில், பழைய காதல், காதலர்களை பிரிந்தது ஏன் என கூறியுள்ளார். 

அதில், நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது. அங்கிருந்து காதல் வெளியேறிவிடும். அதுபோல, நம்பிக்கை இல்லாத ஒருவருடன் வாழ்வதை விட, தனியாக வாழ்வதே சிறந்தது என்று முடிவு செய்து தனது காதலை முறித்துக்கொண்டதாக நயன்தாரா கூறியுள்ளார்.

இதனால் தான் சிம்பு , பிரபுதேவை ப்ரேக்-அப் செய்தேன் - முதன் முறையாக போட்டு உடைத்த நயன்தாரா..! இதனால் தான் சிம்பு , பிரபுதேவை ப்ரேக்-அப் செய்தேன் - முதன் முறையாக போட்டு உடைத்த நயன்தாரா..! Reviewed by Tamizhakam on April 17, 2020 Rating: 5
Powered by Blogger.