"விஜய்க்கு என்ன கொரோனா-வா..?" - நடிகை கிரண் வெளியிட்ட வீடியோ - விளாசும் விஜய் ரசிகர்கள்..!


நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான் ஜெமினி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர் நடிகை கிரண். கொளுக்கு மொழுக்கு என நெய்யில் செய்த சிலை போல இருந்த அம்மணி தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

அதனை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்துள்ளவர். மேலும், இவர் விஜய்யின் திருமலை படத்தில்'வாடியம்மா ஜக்கம்மா.. வந்து நில்லு பக்கம்மா' என்ற ஒரு பாடலுக்கு ஐட்டம் நம்பர் பண்ணியிருப்பார்.

அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இளைஞர்களை அந்த சமயத்தில் வெகுவாக கவர்ந்த பாடல் இது. அந்த பாடலில் இருந்து ஒரு சில நொடிகளை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கிரண். 

விஜய் அவரை தொட வருவது போலவும், கிரண் நோ சொன்னதால் விஜய் கையை எடுத்துவிடுவது போலவும் அந்த காட்சி இருக்கிறது. "தொட கூடாது. சமூக இடைவெளி கடைபிடியுங்கள்" என அது பற்றி குறிப்பிட்டுள்ளார் கிரண். 

கொரோனா பரவி வரும் இந்த சமயத்தில் மக்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக தான் அதை பதிவிட்டுள்ளார் நடிகை. ஆனால், விஜய்க்கு என்ன கொரோனா-வா இருக்கு..? எதுக்கு தேவையில்லாம இந்த வீடியோ போட்டிருக்கீங்க..? என்று ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டனர்.


இதனை தொடர்ந்து, இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள நடிகை கிரண். " நான் விழிப்புணர்வுக்காக தான் அந்த வீடியோவை போட்டேன். விஜய் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் பெரிய மரியாதை வைத்துள்ளேன். கொரோனா-வை சேர்ந்து ஒழிப்போம்" என கூறி விஜய் ரசிகர்களை கூல் செய்துள்ளார் அம்மணி.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்