என்னய்யா சொல்றீங்க..? - இந்த காரணத்துக்காக தனது திருமணத்தையே தள்ளிப்போட்டாரா லக்ஷ்மி மேனன்..!.?


‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். இந்தப் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. அடுத்ததாக சசிகுமாருககு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார். 

இந்தப் படமும் ஹிட்படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் மூலம் தமிழக ரசிகர்களிடம் மனதில் இடம்பிடித்தார். அதன் பின் கார்த்திக்கு ஜோடியாக ‘கொம்பன்’ படத்தில் நடித்தார். 

கடைசியாக ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதிககு ஜோடியாக நடித்தார். அதையடுத்து அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. மேலும் அவரது உடல் எடையும் அதிகரித்து விட்டது. அதனால் அவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.

இந்நிலையில், இவருக்கு திருமணம் ஆகப்போகின்றது என செய்திகள் பரவி வந்தன.ஆனால்,விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க வேண்டி லக்ஷ்மி மேனனுக்கு அழைப்பு வரவே திருமணத்தை கேன்சல் செய்துள்ளார் அம்மணி.

இருவரும் அறிமுகமான கும்கி திரைப்படம் இருவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.தற்போது, விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் என இருவரும் மார்க்கெட் இல்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில், இருவரும் மீண்டும் கூட்டணி நேர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைத்ததால் லக்ஷ்மி மேனன் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

மேலும், லக்ஸ்மிமேனனுக்கு இப்போது தான் வயது 23 ஆகின்றது என்பதால் சினிமாவில் இன்னொருரவுண்ட் வரலாம் என்று அவரது நலம் விரும்பிகள் கூறிய ஆலோசனயும் இதற்கு காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 

என்னய்யா சொல்றீங்க..? - இந்த காரணத்துக்காக தனது திருமணத்தையே தள்ளிப்போட்டாரா லக்ஷ்மி மேனன்..!.? என்னய்யா சொல்றீங்க..? - இந்த காரணத்துக்காக தனது திருமணத்தையே தள்ளிப்போட்டாரா லக்ஷ்மி மேனன்..!.? Reviewed by Tamizhakam on April 09, 2020 Rating: 5
Powered by Blogger.