பட வாய்ப்புக்காக இப்படியுமா..? - இதுவரை நடிக்காத வேடத்தில் கயல் ஆனந்தி - ரசிகர்கள் ஷாக்..!


பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே தனது 17வது வயதில் கயல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயின் ஆனார் நடிகை ஆனந்தி. இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகம் கொடுத்தால் கயல் ஆனந்தி என்றே அரியப்படுகிறார். 

ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் பெற்றிருந்தாலும், கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் போனது. 

எனக்கு கவர்ச்சி செட்டாகாது என்னுடைய உடல் வாகு அப்படி அதனால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கூறிவந்தார். கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கறாராக இருந்ததால் கயல் ஆனந்தியின் மார்க்கெட் மிகவும் பாதித்தது, தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமலேயே போனது அதனால் தற்போது பேய் வேடத்தில் நடிப்பதற்கு இறங்கி வந்து விட்டார். 

ஏஞ்சல் என்ற திரைப்படத்தில் பேய் வேடத்தில் தற்போது நடித்து வருகிறார். பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டமாட்டேன் ஆனால் பேய் வேடத்தில் நடிக்க கூட தயார் என அடி மட்டத்திற்கு இறங்கி வந்து விட்டார் கயல் ஆனந்தி என ஷாக் ஆகிறார்கள் ரசிகர்கள். 

இடையில், திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் சற்றே கோக்கு மாக்கான கதாபத்திரம் இரட்டை அர்த்த வசனங்கள் என நடித்திருந்தார். அதனால் அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவரின் பெயர் டேமேஜ் ஆனது, 

ரசிகர்களுக்கு அவர் மீது இருந்த நம்பிக்கை மாறிவிட்டது. ஆனால், தற்போது நடித்து வரும் ஏஞ்சல் திரைப்படம் திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறார் அம்மணி.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்