கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, இதனால் பிரபலங்கள் முதல் அனைவரும் சமூக வலைத்தளத்தில் தான் நேரம் செலவிட்டு வருகின்றனர்.
அது போல சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி ஆகியோர் டிக்டாக் செய்து பல விடியோக்கள் போட்டு வருகின்றனர். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த கிகியும் அவர் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த சாந்தனுவும் ஒருவருக்கொருவர் காதலில் விழுந்தனர்.
இந்த காதல் கல்யாணத்தில் ஒன்று சேர்ந்தது. திருமணத்திற்கு, பிறகும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார். சில வருடங்களுக்கு முன் கிகி நடன பள்ளி ஒன்றை ஆரம்பித்தார்.
தற்போது பயங்கர பிரபலமான நடன பள்ளியாக உள்ளது. அவ்வப்போது பிரபலங்கள் வந்து நடனம் ஆடி அந்த பள்ளிக்கு மேலும் வழு சேர்கிறார்கள். இதனால், கன ஜோராக கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார் கிகி.
அவ்வப்போது, அந்த டான்ஸ் ஸ்டூடியோவில் சாந்தனுவுடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது வித்தியாசமான டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
Tags
Shandhanu Bhagyaraj