துளி மேக்கப் இல்லாமல் இருக்கும் இளம் நடிகை மஞ்சிமா மோகன்..! - வைரலாகும் புகைப்படம்.!
தமிழில் சினிமாவில் அறிமுகமானா புதிதிலேயே பல நடிகைகள் ரசிகர்களைகவர்ந்து விடுவார்கள். தமிழில் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர போகிறார் பாருங்க என்று ரசிகர்களே சொல்லுவார்கள்.
ஆனால், அடுத்தடுத்த படங்களில் எங்கே போனார்கள் என்றே தெரியாத அளவுக்கு காணாமல் போய்விடுவார்கள். ரசிகர்கள் நினைத்தால் மட்டும் போதாது, இயக்குனர், தயாரிப்பாளர்கள் நினைக்கவேண்டும். அப்போது தான் சினிமா நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எதிர்காலம்.
அப்படி, ரசிகர்களை கவர்ந்து சில வருடங்களில் காணாமல் போன நடிகைகளில் ஒருவர் மஞ்சிமா மோகன். இவர் மதுரமனோம்பர்கட்டு, சுந்தர புருஷன், தாண்டவம், படங்களில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவர் 2015 ஆம் ஆண்டு ஒரு வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் முலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். ஆனால், அடுத்தடுத்த படங்களில் ஆள் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்.
கிட்ட தட்ட இவரை ரசிகர்கள் மறந்தே விட்டார்கள். சரி, சமூக வலைத்தளத்திலாவது ஆக்டிவாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. ஆடிக்கு ஒருநாள், அமாவசைக்கு ஒரு நாள் தலைகாட்டி வருகிறார். அந்த வகையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் துளி மேக்கப் இன்றி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
துளி மேக்கப் இல்லாமல் இருக்கும் இளம் நடிகை மஞ்சிமா மோகன்..! - வைரலாகும் புகைப்படம்.!
Reviewed by Tamizhakam
on
April 27, 2020
Rating:
