ப்ரியா பவானி ஷங்கர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு..? - அவரே கூறிய தகவல்.!


சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சீரியல் நடிகையாக மாறி இப்போது சினிமா நடிகையாக வளர்ந்து விட்டார் ப்ரியா பவானி ஷங்கர். இவரை சுற்றி பல காதல் வதந்திகள் வட்டமடித்தன. 

இதனால், தன்னுடைய காதலன் இவர் தான் என அவரே அறிமுகப்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டு விட்டது.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமான மாஃபியா சாப்டர் 1 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

கொரோனா வைரஸ் தோற்று காரணமாக நாடுமுஹ்ழ்தும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளதால், திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் ரசிகர்களுடன் நேரலையிலும், பதிவுகள் மூலமாகவும் இணையதளத்தில் உரையாடல் நடத்தி வருகின்றனர். 

அந்த வரிசையில் தற்போது நடிகை பிரியா பவானி ஷங்கரும் இணைந்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு என கேட்க " நான் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த போது, ரூ. 360 சம்பளம் வாங்கினேன்" என கூறியுள்ளார்.

ப்ரியா பவானி ஷங்கர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு..? - அவரே கூறிய தகவல்.! ப்ரியா பவானி ஷங்கர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு..? - அவரே கூறிய தகவல்.! Reviewed by Tamizhakam on April 07, 2020 Rating: 5
Powered by Blogger.