மறைந்த நடிகை சௌந்தர்யாவுடன் தொடர்பில் இருந்தது உண்மை தான் - விஜய், அஜித் பட வில்லன் நடிகர் ஒப்பன் டாக்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. பாஜக கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இணைந்த இவர் 2004-ம் ஆண்டு விமான விபத்த்தில் சிக்கி காலமானார்.
இவர் தெலுங்குவில் நடிகர் ஜெகபதி பாபுவுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இருவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது எனவும் இப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இவ்வளவு நாள் கழித்து தற்போது இது குறித்து பேசியுள்ளார் நடிகர் ஜெகபதி பாபு. எனக்கும் சௌந்தர்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக வந்த தகவல்கள் உண்மையே. ஆனால் அது நீங்கள் நினைக்கும் தொடர்பு அல்ல.
நானும் சௌந்தர்யாவும் நல்ல நண்பர்கள், நல்ல தொடர்பு, நட்பு ரீதியான தொடர்பு எனக் கூறியுள்ளார்.மேலும் நானும் சௌந்தர்யாவின் அண்ணனும் நல்ல நண்பர்கள். இருவரும் அடிக்கடி வீடுகளில் சந்தித்து பேசிக் கொள்வோம். அப்படித் தான் சௌந்தர்யாவும் என கூறியுள்ளார்.
ஜெகபதி பாபு நடிகர் விஜயின் பைரவா மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த நடிகை சௌந்தர்யாவுடன் தொடர்பில் இருந்தது உண்மை தான் - விஜய், அஜித் பட வில்லன் நடிகர் ஒப்பன் டாக்..!
Reviewed by Tamizhakam
on
April 09, 2020
Rating:
