மாஸ் நடிகரின் பட விழாவில் அந்த நடிகை ஆட்டம் போட்டது இதுக்கு தானா..! - முணுமுணுக்கும் நடிகைகள்


தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த அந்த இடுப்பழகி நடிகை திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்த்தார். குழந்தை, குட்டி, குடும்பம் என செட்டிலாகிவிட்ட அம்மணி தற்போது பேங்க் பேலன்சை உயர்த்த மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

நல்ல வெயிட்டான கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் அப்போது தான் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர முடியும் என்று யோசனை செய்த அவர் இதற்காக பல முன்னணி ஹீரோக்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம். 

சமீபத்தில்கூட முன்னணி நடிகரின் படவிழாவில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டாராம். இதற்குக் காரணம் நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு தான் அந்த விழாவில் கலந்து கொண்டாராம். இது பல நடிகைகள் கேட்டு தெரிந்து பலரிடம் கிசு கிசுத்து வருகிறார்களாம். 

அந்த மாஸ் நடிகருடன் பல படங்களில் ஜோடி போட்டுள்ள அந்த நடிகையின் மீது தோழி என்பதை தாண்டி அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார் அந்த மாஸ் நடிகர். அவருக்காக, பல படங்களில் வாய்ப்பு கேட்கவும் செய்துள்ளார். ஆனால், அவருக்காக வலுக்கட்டாயமாக கதையில் மாற்றம் செய்து நடிக்க வைத்தால் கடமைக்கு செய்தது போல ஆகிவிடும் என்று நினைகிறாராம் மாஸ் நடிகர்.

இந்நிலையில், பிரமாண்ட இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தில் செம்ம வெயிட்டான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அந்த இடுப்பழகி நடிகைக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறாராம் மாஸ் நடிகர். இதுவல்லவோ நட்புக்கு மரியாதை என்று சிலாகிக்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.

மாஸ் நடிகரின் பட விழாவில் அந்த நடிகை ஆட்டம் போட்டது இதுக்கு தானா..! - முணுமுணுக்கும் நடிகைகள் மாஸ் நடிகரின் பட விழாவில் அந்த நடிகை ஆட்டம் போட்டது இதுக்கு தானா..! - முணுமுணுக்கும் நடிகைகள் Reviewed by Tamizhakam on April 14, 2020 Rating: 5
Powered by Blogger.