கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உலகளவில் கொரோனா நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்கள் மூலம் மற்ற மனிதர்களுக்கு விரைவாக பரவி விடும் தொற்று நோய் என்பதால் இந்தியா முழுதும் ஊரடங்கு உத்தரவை அண்மையில் மத்திய அரசு பிறப்பித்தது.
இதனால் 18 நாட்களாக மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். காய்கறி, பழங்கள் என அத்தியாவசிய உணவுபொருட்களை அரசு மானிய விலையில் மக்களுக்கு தமிழக அரசு மக்களுக்கு வழங்கி வருகிறது.
அதே வேளையில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் கூட்டம் கூட வேண்டாம், சமூக இடைவெளியை கடைபிடிக்கச்சொல்லி நடிகர் ரியாஸ் கான் அண்மையில் சென்னை பனையூரில் வாக்கிங் சென்ற போது அங்கு கும்பலாக இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.
இதனால், கடுப்பான அங்கிருந்தவர்கள் அவரை தாக்க முயன்றுள்ளனர், இதனால் பரபரப்பு ஏற்படவே உடனே ரியாஸ் சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர் தற்போது வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
Tags
Riyas Khan