வாவ்..! - "மங்காத்தா" அஜித் செயின் டாலருக்கு பின்னால் இருக்கும் "குட்டி ஸ்டோரி"யை பாருங்க..!


அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்தை அவ்வளவு எளிதில் அஜித் ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்கள். அதுவரை தோல்வி முகத்தையே சந்தித்துக் கொண்டிருந்த அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

முதலில் மங்காத்தா படத்தில் அஜீத் கமிட்டான போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நீங்க நடிக்கிறீங்களா என அஜித்தை கிண்டல் செய்தார்களாம். காரணம் வெங்கட்பிரபு அவ்வளவு பெரிய இயக்குனர் கிடையாது, அஜித்தின் படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து கொண்டிருந்ததால் இப்படி ஒரு கூட்டணி கோலிவுட்டில் அமைந்தது.

படத்தின் டீசர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக தொற்றிக்கொண்டது. படம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்நிலையில், இந்த படத்தை சமீபத்தில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்தார்கள்.

இதனால்,ரசிகர்கள் மங்காத்தா என்ற டேக்கை ட்ரெண்டாக்கினார்கள். அப்போது, உள்ளே வந்த படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் மங்காத்தா படத்தில் அஜித் அணிந்திருந்த செயினில் இருக்கும் டாலரின் மர்மத்தை வெளியே கொண்டு வந்தார்.

அவர் கூறியுள்ளதாவது, படத்தின் க்ளைமாக்ஸில் ஹீரோ ஆணிந்திருக்கும் செயின் மற்றும் டாலர் முக்கிய பங்காக இருக்கும். க்ளைமாக்ஸில் ஹீரோ அந்த செயின் மற்றும் டாலரை கழட்டி நெருப்பில் போடுவது போன்ற காட்சி உள்ளது என இயக்குனர் வெங்கட்பிரபு கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அஜித் ஆஃப் ட்யூட்டியில் இருக்கும் போலீஸ் என்பதால் கை விலங்கு டிசைன் டாலர் கச்சிதமாக இருக்கும் என யோசித்து டிசைன் செய்யப்பட்டது தான் அந்த டாலர் என்று கூறியுள்ளார்.
வாவ்..! - "மங்காத்தா" அஜித் செயின் டாலருக்கு பின்னால் இருக்கும் "குட்டி ஸ்டோரி"யை பாருங்க..! வாவ்..! - "மங்காத்தா" அஜித் செயின் டாலருக்கு பின்னால் இருக்கும் "குட்டி ஸ்டோரி"யை பாருங்க..! Reviewed by Tamizhakam on April 01, 2020 Rating: 5
Powered by Blogger.