விஜய்யின் முதல் ஹிட் படம் "பூவே உனக்காக" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!


நடிகர் விஜய்யின் சினிமா வாழ்கையை மாற்றியமைத்த ஒரு திரைப்படம் தான் "பூவே உனக்காக" எத்தனை ஆண்டுகளானாலும் ரசிக்க வைக்கும் படம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒரு படம். 

விஜய்யை பிடிக்காது என்று சொல்பவர்களால் கூட இந்த பூவே உனக்காக படத்தை வெறுக்க முடியாது. காரணம் விக்ரமனின் இயக்கம், விஜய்யின் எதார்த்தமான நடிப்பு. சிறு சிறு படங்களில் நடித்து வந்த விஜய்க்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த படம் பூவே உனக்காக. 

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி உள்ளிட்டோர் நடித்த அந்த படம் இன்றைய தலைமுறைக்கும் பிடிக்கும் படம். 

இந்த படத்தில் விஜய்க்கு குத்து வசங்னங்கள் இல்லை. ஒரு இருபது, முப்பது பேரை தூக்கி போட்டு பந்தாடும் சண்டை காட்சிகள் இல்லை. ஆனாலும், ரசிகர்கள் விஜய்யை கொண்டாட வைத்த படம். 

இன்றளவும், இந்த படத்தில் இடம் பெற்ற ஆனந்தம் ஆனந்தம் பாடும் என்ற பாடல் பலரது வாட்சப் ஸ்டேட்டஸ்களில் ஒளிபரப்பாகி கொண்டிருகின்றது விஜய்யின் கெரியரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது பூவே உனக்காக படம் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. 

ஆனால், இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நம்ம நவரச நாயகன் கார்த்தி என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆம், இந்த படத்தின் இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பூவே உனக்காக படத்தை பற்றி சில விஷயங்களை பேசியுள்ளார். “அப்போதே 275 நாள் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெற்றிகரமாக ஓடிய இந்தப் படத்தில் முதலில் நடிகர் கார்த்தியை தான் நடிக்க வைக்க நினைத்தேன். அதன் பின்னர்தான் எனக்கு விஜயை வைத்து பண்ணலாம் என தோன்றியது” என்று கூறியுள்ளார்.

விஜய்யின் முதல் ஹிட் படம் "பூவே உனக்காக" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..! விஜய்யின் முதல் ஹிட் படம் "பூவே உனக்காக" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..! Reviewed by Tamizhakam on April 18, 2020 Rating: 5
Powered by Blogger.