நடிகை ஸ்ரேயா ஸ்பெயின் நாட்டை சேர்ந்த Andrei Koscheev என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது, பார்சிலோனியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், ஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev -ற்கு கொரோனா அறிகுறி இருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 13-ம் தேதி திருமண நாளை கொண்டாடினார்கள். இது குறித்து நடிகை ஸ்ரேயா பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், எங்களுடைய திருமண நாளை கொண்டாடுவதற்கு எங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ரெஸ்டாரண்டில் இருக்கை முன்பதிவு செய்திருந்தோம்.
அதனை தொடர்ந்து,எங்கள் திருமண நாளன்று இருவரும் அந்த ரெஸ்டாரண்டிற்கு சென்றோம். ஆனால், அந்த ரெஸ்டாரன்ட் மூடி இருந்தது. பிறகு தான் தெரிந்தது, இந்த வைரஸின் தீவிரம். மேலும், வீட்டில் இருந்து ஒருவர் தான் வெளியே வரவேண்டும் என்றும் இங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.
எங்களை போலீஸ் பிடித்தது. ஆனால், என் கணவர் வெள்ளையாக இருப்பதாலும், நான் ப்ரவுன் கலரில் இருப்பதாலும் வேறு வேறு வீட்டில் இருந்து வந்தவர்கள் என்று நினைத்து எங்களை விட்டு விட்டார்கள்.
வீட்டிற்கு வந்த பிறகு என் கணவருக்கு வரட்டு இருமல் மற்றும் காயச்சல் அடித்தது. இதனால், அருகில் உள்ள மருத்துவமைக்கு சென்றோம். கணவரை சோதித்த மருத்துவர்கள். இவருக்கு Covid-19 தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது. ஆய்வு முடிவுகள் வரும் வரை உங்கள் வீட்டிலேயே நீங்கள் இருக்கலாம். ஆனால், உங்கள் கணவர் தனிமையில் தான் இருக்க வேண்டும் என்று கூறி விட்டனர்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி இப்போது, என் கணவர் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு கூறியுள்ளார் ஸ்ரேயா.
Tags
shreya saran