"நான் உங்க பேச்சை கவனிக்கவே இல்லை.." - டைட்டான உடையில் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோ..!


தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார். 

கமலஹாசனோடு சேர்ந்து நடித்த விஸ்வரூபம் படத்தில், உன்னை காணாமல் நானும் நான் இல்லையே பாடல் இவருக்கு மிக நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. இடையில் சிலகாலம் திரையில் தோன்றாத ஆண்ட்ரியா, முறிந்த சிறகுகள் என்ற பெயரில் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். தன் சமூகம் பற்றி வரலாறையும் அவர் புத்தகமாக எழுதப்போவதாக கூறியுள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மணி.

இந்நிலையில், கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள அவர். வீட்டில் இருங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் என பல விஷயங்களை கூறியுள்ளார்.


அந்த வீடியோவை பார்த்த பலரும், மக்கள் உங்கள் வார்த்தைகளை கவனிப்பார்கள் என நம்புகிறீர்களா..? என்றும் நிஜமாக நான் நீங்க என்ன பேசுகிறீர்கள் என்பதை கவனிக்கவே இல்லை. என்றும் கருத்து பதிவு செய்து வருகிறார்கள்.  


"நான் உங்க பேச்சை கவனிக்கவே இல்லை.." - டைட்டான உடையில் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோ..! "நான் உங்க பேச்சை கவனிக்கவே இல்லை.." - டைட்டான உடையில் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on April 05, 2020 Rating: 5
Powered by Blogger.