உழைப்பிற்கும், அர்பணிப்புக்கும் பேர் போன நடிகர் சினிமாவில் இருந்து விலகுகிறார். இனிமேல் நடிக்க மாட்டார். வயதாகிவிட்டதால் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார் என தாறுமாறாக தகவல்கள் இணையத்தை வட்டமிட்டன.
என்னது நான் ரிட்டயர்ட் ஆகுறேனா..? என்று அடித்து பிடித்துக்கொண்டு வந்து விளக்கம் கொடுத்தார் அந்த நடிகர். இந்த வதந்தி காரணமே நடிகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த அந்த மில்க் இயக்குனர் தான்பா என்று கிசுகிசுகிரார்கள்.
சமீபத்தில், வாரிசு நடிகைரை வைத்து படம் எடுக்க சொல்லி, அந்த படம் எதிர்பார்த்தது போல வராததால் அந்த இயக்குனரையே மாற்றி படத்தை தூக்கி குப்பையில் போட்டு விட்டு வேறு இயக்குனரை வைத்து புது படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார் அந்த நடிகர். ஆனால், இந்த படத்தை ரசிகர்கள் குப்பையில் போட்டு விட்டனர்.
இதனால், அந்த மில்க் இயக்குனர் கோபத்தில் இருந்ததாகவும் இதனால் தான் இவர் இப்படியொரு வதந்தியை கிளப்பிவிட்டிருப்பார் எனவும் கோலிவுட்டில் ஒரு பேச்சு. ஆனால், அவரு அப்படி ஆளு இல்ல, எதிர்பதாக இருந்தால் முகத்திற்கு நேராக நின்று எதிர்ப்பார். சும்மா கதை கட்டி விடாதிங்க என்ற பேச்சும் வட்டமடிக்கின்றது.
சரி, இது என்ன தான்பா காரணம் என்று விசாரித்த போது, சின்ன சின்ன நடிகர்கள் எல்லாம் லட்சங்களிலும், கோடிகளிலும் நிதியுதவி கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மார்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகர் படத்திற்கு 30கோடி சம்பளம் வாங்கும் ஒரு நடிகர், அதுவும் வீட்டுல ரெண்டு பேரு சினிமா மூலம் கோடி கோடியாக காசு பார்கிறார்கள்.
கொஞ்சம் கொடுத்தாதான் என்னவாம் என்ற பேச்சு இணையத்தில் எழ ஆரம்பித்து இறுதியில் அவர் சினிமாவை விட்டே ஓய்வு பெற போகிறார் போல அதுதான் நிதியுதவி தர மாட்டேன் என்கிறார் என்று ஆரம்பித்துள்ளது இந்த விவகாரம்.
அந்த நடிகர் பல உதவிகளை வெளியில் சொல்ல வேண்டாம் என செய்துள்ளார். ஆனால், இது போன்ற விஷயத்தில் மீடியாவிடம்சொல்லிவிட்டு செய்தால் தான் ரசிகர்களுக்கு இன்னார் கொடுத்தார். இன்னார் கொடுக்கவில்லை என்று தெரியும் என்று விசனக்குரல் பதிவு செய்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.