"என்ன, காலையிலேயே போதையா..?.." - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்..!


தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பின்னணி பாடகியும் ஆவார். இவர், கடந்த 2005 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 

இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அவர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அறிமுக நடிகையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். 

இதனை அடுத்து அவர் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி தமிழ்சினிமாவில் என ஒரு இடத்தை நிலைநாட்டிய வருகிறார். 

இவர் பெரும்பாலான வித்தியாசமான கதைகளம் அமைத்திருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த படங்களான மங்காத்தா, ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை, விஸ்வரூபம், தரமணி,அவள் போன்ற படங்கள் இன்றளவும் மக்களால் பேசப்படும் படங்களாக உள்ளன.

தற்போது, நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் வீட்டில் இருந்த படி யோகா மற்றும் உடற்பயிசிகளை மேற்கொண்டு வருகிறார்.


அந்த வகையில், இன்று யோகா பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அவரை பார்த்து என்ன காலையிலேயே போதையா..? என கலாய்த்துள்ளார் ஒரு நெட்டிசன்."என்ன, காலையிலேயே போதையா..?.." - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்..! "என்ன, காலையிலேயே போதையா..?.." - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on April 15, 2020 Rating: 5
Powered by Blogger.