ஆங்கில பத்திரிக்கை அட்டை படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை - வைராலாகும் புகைப்படங்கள்..!


இளம் நடிகை அதிதி ராவ் தனது 22-வது வயதிலேயே வீட்டில் உள்ள பெரியவர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால், திருமணம் ஆன மூன்றே ஆண்டுகளில் விவாகரத்தும் பெற்றார். 

தமிழில், 'காற்று வெளியிடை’ படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து இப்போது பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துவருகிறார். 

எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ராவ் சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை விட அதற்கு அவர் வைக்கும் தலைப்புகள் தான் ரசிகர்களின் பேவரைட் என கூறலாம். அணியும் ஆடைகளை வைத்து மதிப்பிடும் பழக்கம் இன்னும் நம்மிடம் இருக்கிறது. அளவுக்கு அதிகமான கவர்ச்சி எனக்குப் பொருந்தாது எனஅடிக்கடி கூறுவார் அம்மணி.


ஆனால், ஆங்கில பத்திரிக்கைக்கு போஸ் கொடுப்பது என வந்து விட்டால் அதையெல்லாம் மறந்து விடுவார் அம்மணி. அந்த வகையில், சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு அவர் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகின்றன.