பெரட்டி விடு.. செதற வுடே.! - மாஸ்டர் படத்தில் இப்படி ஒரு காட்சி இருக்காம் - போட்டு உடைத்த நடிகை ஆண்ட்ரியா..!


சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். 

நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மாஸ்டர் படத்தில் அழகு சிலைகளாக மட்டுமின்றி நாயகிகளுக்கும் பவர்ஃபுல்லான ரோல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்று வரும் நிலையில், ஆண்ட்ரியாவும் தீவிர ஜிம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

2020ம் ஆண்டின் மிகப்பெரிய படமாக தளபதி விஜய்யின் மாஸ்டர் உருவாகி வருவதாகவும், இந்த படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கும் லோகேஷ் கனகராஜ் போன்ற ஒரு டேலன்ட்டான இயக்குநருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி என ஆண்ட்ரியா கூறியுள்ளார். 

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில், ஒரு பேட்டியில் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி குறித்து பேசியுள்ளார். 

அவர் கூறியதாவது, "மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சேசிங் சீன் இடம் பெற்றுள்ளது, அதில் நானும் விஜய் சார் கூட இருப்பேன். மேலும் அது படத்தில் மிக முக்கிய கட்சியாக இருக்கும்" என கூறியுள்ளார்.

பெரட்டி விடு.. செதற வுடே.! - மாஸ்டர் படத்தில் இப்படி ஒரு காட்சி இருக்காம் - போட்டு உடைத்த நடிகை ஆண்ட்ரியா..! பெரட்டி விடு.. செதற வுடே.! - மாஸ்டர் படத்தில் இப்படி ஒரு காட்சி இருக்காம் - போட்டு உடைத்த நடிகை ஆண்ட்ரியா..! Reviewed by Tamizhakam on April 20, 2020 Rating: 5
Powered by Blogger.