"இது என்னை வா.. வா.. என்று அழைப்பது போல உள்ளது" - ரம்யா பாண்டியன் உணர்ச்சிவசம்..!


நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' படத்தின் மூலம் அறியப்பட்டவர் ரம்யா பாண்டியன். 

அதற்குப் பிறகுச் சரியான திரையுலக வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், தன் வீட்டின் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டின் மூலம் பிரபலமானார்.அதற்குப் பிறகு அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் வந்தது. 

ஆனால், விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அதில் மேலும் பிரபலமானார். தற்போது இவருக்கென்று தனி ரசிகர்கள் வட்டம் சமூகவலைதளத்தில் இருக்கிறது. இருந்தாலும், திரையுலகில் கவனம் செலுத்தாமலேயே இருந்தார். காரணம் என்னவென்றால், நல்ல அழுத்தமான கதை மற்றும் கதாபாத்திரதிற்காக காத்திருந்தாராம் அம்மணி.

இந்நிலையில் தான், சூர்யா தயாரிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரம்யா பாண்டியன். இதனை, அவரே ரசிகர்களிடம் நேரலையில் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவருக்கு புதுக்கவிதை படத்தில் இடம் பெற்ற, 'வா... வா... வசந்தமே' பாடல் மிகவும் பிடிக்குமாம். 

இவர், "தற்போதைய கொரோனா பீதி காலத்தில், அந்த பாடலை கேட்கும்போது, நானே வசந்த காலத்தை, 'வா... வா' என, அழைப்பது போல் உள்ளது. இது மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாகவும் உள்ளது" என்று உணர்ச்சிவசப்பட்டவராக கூறியுள்ளார்.

"இது என்னை வா.. வா.. என்று அழைப்பது போல உள்ளது" - ரம்யா பாண்டியன் உணர்ச்சிவசம்..! "இது என்னை வா.. வா.. என்று அழைப்பது போல உள்ளது" - ரம்யா பாண்டியன் உணர்ச்சிவசம்..! Reviewed by Tamizhakam on April 28, 2020 Rating: 5
Powered by Blogger.