சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருக்கும் நட்சத்திர ஜோடிகளில் சாந்தனு-கீகீ ஜோடியும் ஒன்று. இதில் கீகீ நடனப்பள்ளி வைத்திருப்பதா அடிக்கடி இருவரும் சேர்ந்து நடனமாடும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
தற்போது ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் அவர்கள், கியூட்டான தங்களது ரியல் லைஃப் காதலை டிக் டாக் வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில், நடிகர் சாந்தனு வீடியோ கேம்கள் மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட, கீகீ கணவனின் பாசத்திற்காக ஏங்கி அருகில் வருகிறார். முதலில் அவரை சாந்தனு கண்டுகொள்ளவில்லை.
இறுதியில் கீகீயின் காதல் வெல்ல, அவரைக் கட்டிக் கொள்கிறார் சாந்தனு. இந்த வீடியோவில் ரியல் லைஃப் ஜோடியாக சாந்தனு-கீகீயின் கெமிஸ்ட்ரி அழகாகவும், இயற்கையாகவும் இருப்பதாக அவர்களது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.