90 'ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத ஒரு பாடல் "மன்மத ராசா". நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது இந்த பாடல் என்று சொல்லலாம்.
பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்த இந்த பாடல் இடம் பெற்ற திருடா திருடி படத்தில் ஹீரோயினாக நடித்து இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகை சாயா சிங்.
இந்நிலையில், 'மன்மதராசா' பாடலுக்கு கிட்ட தட்ட 17 வருடம் கழித்து, அந்த பாடலின் நடன இயக்குனர் சிவஷங்கர் மாஸ்டருடன் ஆட்டம் போட்டுள்ளார். கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் சாயா சிங். பின், நடிகர் தனுஷ் நடித்த, 'திருடா திருடி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.
முதல் படமே, இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'மன்மதராசா பாடல்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, கவிதை, அருள், ஜெய் சூர்யா, உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்தாலும், முன்னணி இடத்தை பிடிக்கமுடியவில்லை.
தமிழை தவிர, மலையாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்தார். பின் கடந்த 2012 ஆம் ஆண்டு, குணச்சித்திர நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், மன்மத ராசா பாடலுக்கு ஆட்டம் போட்டு இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.



