41 வயதிலும் இப்படியா..? - மாளவிகா வெளியிட்ட புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..!
தமிழில் உன்னை தேடி என்ற திரைப்படம் மூலம் 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது. சித்திரம் பேசுதடி படத்தில் இவர் நடனமாடிய வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பயனற்ற பிசியாக இருந்த மாளவிகா 2009 ஆம் ஆண்டு வெளியான ஆறுபடை படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டு திருமண வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.
அதன்பிறகு அவர் படங்களில் தலைகாட்டுவதில்லை. நடிகை ரீமா சென் இவருடைய நெருங்கிய தோழி ஆவார். அவ்வவ்போது, அவரை சந்திக்கும் போதெல்லாம் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிடுவார்.
மாளவிகா மற்றும் ரீமா சென் ஆகிய இருவரும் சினிமாவை விட்டே போனதற்கு திருமணம் மட்டும் காரணம் அல்ல பிரபல அரசியல் புள்ளி ஒருவர் கொடுத்த கசமுசா டார்ச்சர் தான் என்ற பேச்சும் உண்டு.
இப்போது, குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகி மகிழ்ச்சியான வாழ்கை வாழ்ந்து வரும் மாளவிகா யோகா செய்வதில் அதீத ஈடுபாடு கொண்டவர். அந்த வகையில், யோகா செய்யும் போது அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் 41 வயதிலும் இப்படி ஃபிட்டாக இருக்கிறாரே என வாயை பிளந்து வருகிறார்கள்.
41 வயதிலும் இப்படியா..? - மாளவிகா வெளியிட்ட புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
May 09, 2020
Rating:
