"என்னை பற்றிய கிசுகிசுக்களை நான் படிக்கும் போது..." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட கிண்டல் புகைப்படம்..!


தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கி, இப்போது சினிமா ஹீரோயினாக கிடுகிடுவென வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். 30 வயது ஆகும் இவர் சின்னத்திரையில் இருந்த காலத்திலேயே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றார். 

ப்ரியா கல்லூரியில் படித்தபோதில் இருந்தே ராஜ்வேல் என்பவரை காதலித்து வருகிறார். ராஜ்வேலை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகத் தான் ப்ரியா சின்னத்திரைக்கு குட்பை சொன்னதாக பேசப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் தயவு செய்து மீண்டும் நடிக்க வாங்க என்று கெஞ்சினார்கள். 

அதன் பிறகு ப்ரியா மேயாதமான் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ராஜ்வேலுடனான காதல் முறிந்துவிட்டது போன்று அதனால் தான் ப்ரியா திருமணம் செய்து கொள்ளாமல் மீண்டும் நடிக்க வந்துவிட்டார் என்று கூறப்பட்டது. 

ஆனால், ப்ரியா ராஜ்வேல் பற்றி அவ்வப்போது சமூக வலைதளத்தில் போஸ்ட் போடுகிறார். ராஜ்வேலின் பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்தி ப்ரியா போட்ட உருக்கமான போஸ்ட்டை பார்த்தவர்கள் இருக்கு, அவர்களிடையே நிச்சயம் காதல் இருக்கு என்றார்கள். இந்நிலையில் மீண்டும் பிரேக்கப் பற்றி பேச்சு கிளம்பியுள்ளது.

இதற்கு பதிலா அளிக்கும் விதமாக கைப்பேசியை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு "என்னை பற்றிய கிசுகிசுக்களை நான் படிக்கும் போது" என்று கேப்ஷன் வைத்துள்ளார்.

"என்னை பற்றிய கிசுகிசுக்களை நான் படிக்கும் போது..." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட கிண்டல் புகைப்படம்..! "என்னை பற்றிய கிசுகிசுக்களை நான் படிக்கும் போது..." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட கிண்டல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 18, 2020 Rating: 5
Powered by Blogger.