சமீப காலமாக சினிமா நடிகைகள் பலரும் பச்சை குத்திக்கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். நம்ம ஊர் பச்சை குத்துதலின் வெளிநாட்டு வெர்ஷன்தான் 'டாட்டூ'.
சினிமா பிரபலங்கள் மத்தியில் இந்த டாட்டூ குத்துதல் மிகவும் பிரபலம்தான். அதிலும் நடிகைகள் தங்கள் உடலில் டாட்டூ குத்த தேர்வு செய்யும் இடங்களும் அவர்கள் குத்தும் டாட்டூவும் கொஞ்சம் விவகாரமாகவே இருக்கும்.
சில மறைவிடப் பகுதிகளில் கூட நடிகைகள் டாட்டூ குத்தியிருப்பார்கள். அது எப்போதாவது ஒரு முறைதான் வெளிப்படும். தமிழ் நடிகைகளில் த்ரிஷாவின் டாட்டூவும், நயன்தாராவின் டாட்டூவும்தான் மிகவும் பிரபலமானவை.
நடிகை த்ரிஷா மற்றும் சிம்ரன் இருவரும் தனது முன்னழகின் சற்று மேலே டாட்டூ குத்தியுள்ளனர். நடிகை நயன்தாரா அவருடைய "Prabhu" என்ற டாட்டூவை "Positivity" என்று திருத்தியதாலும் பிரபலமானவர்கள்.
பிக் பாஸ் புகழ் நடிகை சாக்ஷி வலது கை மணிக்கட்டுப் பகுதியில் ஒரு டாட்டூ குத்தியிருக்கிறார். அதை அவருடைய பல புகைப்படங்களில் பார்த்திருக்கலாம்.
அவருடைய இடதுகால் தொடைப் பகுதியில் குத்தியுள்ள டாட்டூவை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆங்கிலத்திலும் இல்லாமல், தமிழிலும் இல்லாமல். பிரெஞ்சு மொழியில் 'லா வீ எஸ்ட் பெல்லே' என அந்த டாட்டூவில் இடம் பெற்றுள்ளது. அப்படியென்றால் ஆங்கிலத்தில் 'லவ் இஸ் பியூட்டிபுல்' என்று அர்த்தம். “இது என்ன என்று மட்டும் பேசாதீர்கள், அது போல இருங்கள்,” எனக் கேட்டுக் கொண்டு இந்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார் ஷாக்ஷி.



