தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமான பிரபல தொகுப்பாளினி மணிமேகலை தொலைக்காட்சி நிகழ்சிகள் மற்றும் மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டான்ஸ் மாஸ்டர் உசேன் என்ற இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தும் நான் அவரை தான் திருமணம் செய்துகொள்வேன் என மதம் தாண்டி , பெற்றோர்களை எதிர்த்து உசேனை மணம் முடித்தார் மணிமேகலை.
இந்நிலையில், சமீபத்தில் கணவர் குல்லா அணிந்திருக்க, தான் ஹிஜாப் அணிந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
இதனை பார்த்த பலரும் அவருக்கு நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து கொண்டிருக்க, ஒரு வழியாக உங்களை காதலித்து திருமணம் செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றி விட்டார். இது தான் லவ் ஜிகாத்தோ..? என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டு மணிமேகலையை கடுப்பேற்றினார்.
இதற்கு மணிமேகலை கொடுத்த பதில் பின் வருமாறு, ரம்ஜான் வாழ்த்து சொல்லவதற்கு மதம் மாறிவிட்டு தான் சொல்லனுமா? யாரும்
இங்கு மதம் மாறவில்லை, ஹூசைன் என்னுடன் கோவிலுக்கு வருவார். நாங்கள்
ரம்ஜானும் கொண்டாடுவோம். நாங்கள் இதில் தெளிவாக உள்ளோம். உங்கள்
குழப்பங்களை இங்கு கொண்டு வராதீர்கள் என கூலாக கூறியுள்ளார்.



