கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர், ஒரு பெரிய நாய் பிரியை.
பல்வேறு விலங்குகள் நல அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் திரிஷா தனது வீட்டில் நிறைய நாய்களை வளர்த்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர் செல்ல நாய்களுடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் நாய்கள் சூழ திரிஷா உடற்பயிற்சி செய்கிறார். "உடற்பயிற்சி செய்யாமல் இவர்களிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன்" என தலைபிட்டுள்ளார்.
கடந்த 3-ம் தேதி தான் திரிஷா தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
Trisha