வாயை கொடுத்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய நடிகை - சந்தி சிரித்த சினிமா வாழ்க்கை.! - பரிதாபமாய் பார்க்கும் கோலிவுட்..!


தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் சில நடிகர்களின் குடும்பமே சினிமாவில் வேலை செய்து சினிமா குடும்பம் என்ற பெயரை பெறுவார்கள். அந்த வகையான சினிமா குடும்பத்தில், அறிவு நிறைந்த குடும்பமாக பலராலும் பார்க்கப்பட்ட குடும்பம் தான் அந்த பெரிய நடிகரின் குடும்பம். 

அப்பா, அண்ணன், தம்பி, மருமகள் என அனைவருமே தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்கள். அதுமட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதிலும் அவர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை. ஊருக்கே நல்லது செய்தாலும் அந்த பிரபல அண்ணன் நடிகருக்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு படங்களும் வெற்றியடையவில்லை.

இவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கும் நிலையில், தன்னுடைய சொந்த பணத்தை தன்னுடைய பெயரில், தன்னுடைய உறவினர்கள் பெயரில் என விதவிதமான தயாரிப்பு நிறுவங்களில் நடிப்பது போல காட்டிக்கொண்டு வித்தைகாட்டி வருகிறார் அந்த வெளிச்சமான நடிகர். 

அந்த ரைட்ஸ்,இந்த ரைட்ஸ் என விற்பனை செய்தும் நஷ்டமே மிஞ்சியது. இதனால், கடுப்பான நடிகர் லீடர் நடிகரின் பாணியில் அரசை சீண்டுவது, சர்ச்சையான விஷயங்களில் மேடை பேச்சு மூலம் வம்படியாக சென்று சிக்குவது என இறங்கி விட்டார். 

இவரின் இந்த நடவடிக்கைகளை உற்று நோக்கிய லீடர் நடிகரின் ரசிகர்கள். எல்லாரும் லீடர் ஆகிட முடியுமா..? தண்ணிய குடி.. தண்ணிய குடி என வெளிச்ச நடிகரை உருட்டி விளையாடினார்கள்.

தொடர் தோல்விகளால் நஷ்டத்தை ஈடு கட்ட நடிகரின் மனைவியும் கோதாவில் குதித்தார். கணவரை வைத்து படமெடுக்க பயந்த நடிகர்கள் அவரது மனைவியும் முன்னாள் கனவுக்கன்னி நடிகையுமான பிரகாசமாக எரியும் நடிகையை வைத்து படமெடுக்க முன்வந்தார்கள். குறைந்த பட்ஜெட் கணிசமான லாபம் என தயாரிப்பாளர்களும் ஹேப்பி. இதனால், சற்றே நிம்மதியாக இருந்தார் வெளிச்சமான நடிகர்.

பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த நடிகை சமீபத்தில் ஒரு மேடையில் தீப்பிடித்து எரியும்அளவுக்கான ஒரு கருத்தை ஊதி விட்டு வந்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளிச்ச நடிகருக்கு ரசிகர் மன்றம் வைத்து கொண்டாடிய ரசிகர்கள் சிலர் அவர்களது ரசிகர் மன்ற போர்டை கழட்டி சாக்டைடையில் வீசியடித்த காட்சிகள் வேறு அரங்கேறி இணையத்தில் வைரலாகியதால் அவர்களின் சினிமா வாழ்கையை சந்தி சிரித்தது. இதனால், ஏற்கனவே நொந்து போயிருக்கும் நடிகர் மேலும் நொந்து போயுள்ளாராம். 

ஏற்கனவே அந்த நடிகர் கல்வி விஷயத்தில் அரசியல்வாதிகளை பகைத்துக் கொண்டுள்ளார். பத்தாததுக்கு மனைவியும் இப்படி சண்டை இழுத்து பெரும்பான்மை சமூகத்தின் வெறுப்பை சம்பாதித்து கொண்டு வந்துள்ளது அப்பா நடிகருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் குடும்பத்தில் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாம். அப்பா நடிகர் பயங்கர டென்ஷன் ஆகிவிட்டாராம் இந்த விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்து. அதைப்பற்றி நடிகையிடம் கண்டிக்க அவருக்கும் சுர்ரென கோபம் வந்துவிட்டதாம். 

இதனால் தற்போது யாருக்கு சப்போர்ட் செய்வது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் அந்த வெளிச்ச நடிகரின் தம்பியும் அவரது மனைவியும்தான் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சமாதானம் செய்து வருகிறாராம். 

ஏற்கனவே அரசியல்வாதிகளுடன் பிரச்சனை, தியேட்டர்காரர்கள் உடன் பிரச்சனை என நொந்து போயிருந்த குடும்பத்தில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தின் வெறுப்பை சம்பாதித்த அதே குடும்பத்தை சேர்ந்த பிரகாசமாக எரியும் நடிகை மீதும், அந்த குடும்பத்தினர் மீது சினிமா உலகினர் பரிதாபப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வேதனை.

வாயை கொடுத்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய நடிகை - சந்தி சிரித்த சினிமா வாழ்க்கை.! - பரிதாபமாய் பார்க்கும் கோலிவுட்..! வாயை கொடுத்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய நடிகை - சந்தி சிரித்த சினிமா வாழ்க்கை.! - பரிதாபமாய் பார்க்கும் கோலிவுட்..! Reviewed by Tamizhakam on May 08, 2020 Rating: 5
Powered by Blogger.