ரசிகர்களை கவர்ந்த குறும்படம் "ஆரா" - இயக்குனருக்கு குவியும் பாராட்டுகள்..!


"ஆரா" குறும்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சி பெருகி விட்ட இந்த காலகட்டத்தில் எப்படியெல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், இப்படியுமா ஏமாற்றுவார்கள்..? என்று கேட்கும் அளவுக்கு பல கொள்ளைகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில், இயக்குனர் ஜி.ராம்குமார் "ஆரா" என்ற குறும்படத்தை தந்திருக்கிறார். விறுவிறுப்பு நிறைந்த திரைக்கதையுடன் வெளியாகியுள்ள இந்த குறும்படத்தில் பிரபல தொகுப்பாளினி ஆர்த்தி சுபாஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

நடிகர் பிரித்திவி ராஜ், சிவா, சுரேஷ், கார்த்திக், பாபலா, சந்தோஷ் மற்றும் மோனிகா, அகான்ஷா ஆகியோர் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.


இந்த படத்தின் கதைப்படி, மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கதாநாயகனை, நாயகி ஆர்த்தி சுபாஷ் காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்கிறார்கள். ஒரு நாள் காதலியுடன் கடற்கரைக்கு சென்று காத்தாட பேசிக்கொண்டிருந்து விட்டு திரும்பும் போது கதாநாயகியின் காலடி மண்ணை ஒரு மர்ம நபர் வந்து எடுத்து செல்கிறார்.. அதன் பிறகு என்ன ஆனது..? ஹீரோயினும், ஹீரோவும் எப்படி சந்தித்து கொண்டார்கள்..? எப்படி காதல் வயப்பட்டார்கள்..? என்பதையும் இதற்கிடையில் நடந்த தில்லு முல்லு வேலைகளையும் தெளிவாக படம் போட்டு காட்டியுள்ளார் இயக்குனர் ராம்குமார்.ஜி.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த குறும்படம் இதோ,

ரசிகர்களை கவர்ந்த குறும்படம் "ஆரா" - இயக்குனருக்கு குவியும் பாராட்டுகள்..! ரசிகர்களை கவர்ந்த குறும்படம் "ஆரா" - இயக்குனருக்கு குவியும் பாராட்டுகள்..! Reviewed by Tamizhakam on May 04, 2020 Rating: 5
Powered by Blogger.