கோடிகளில் சம்பளம் கொடுத்தும் முன்னணி ஹீரோவுடன் நடிக்க முடியாது என மறுத்த தமன்னா..! - என்னவாம்..?


நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் மட்டும் தமிழில் இவரது நடிப்பில் நான்கு படங்கள் வெளிவந்தது. 

தமிழ் , தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தியிலும் தலை காட்டுகிறார். கடந்த ஆண்டு, நடிகர் உதயநிதியின் கண்ணே கலைமானே, பிரபுதேவாவின் தேவி 2, விஷாலின் ஆக்ஷன் மற்றும் பெட்ரோமாக்ஸ் என்கிற ஹாரர் படம் ஆகியவற்றில் தமன்னா நடித்திருந்தார். 

இதில், ஆக்ஷன் திரைப்படத்தில் தன்னுடைய கவர்ச்சியின் அடுத்த பரிமாணத்தை அவிழ்த்து விட்டார் அம்மணி. அதனை தொடர்ந்து தற்போது, "பேட்ட" பட வில்லன் நாவாசுதீன் சித்திக் நடிக்கும் "போலே சுடியான்" என்ற ஹிந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார் தமன்னா. 

இந்நிலையில், அடுத்து தெலுங்கில் நடிகர் ரவி தேஜா ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க தமன்னாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என செய்தி சமீபத்தில் வெளியாகி இருந்தது. 

ஆனால், அந்த படத்தில் நடிக்க முடியாது என தெறித்து ஓடியுள்ளார் அம்மணி. என்ன காரணம் என்று விசாரித்த போது இந்த படத்தில் நடிக்க நடிகை தமன்னா மொத்தமாக மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் தயாரிப்பாளர்கள் அவ்வளவு தர முடியாது என கூறி விடவே நடிக்க முடியாது என கூறியுள்ளார் தமன்னா.

ஏற்கனவே, 2015ல் வெளிவந்த பெங்கால் டைகர் என்ற படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா. அந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஜோடி தற்போது மீண்டும் இணையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது. 

சமீபத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் கடைசியாக டிஸ்கோ ராஜா படத்தில் நடித்திருந்தார். அடுத்து கிராக் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் அவர். இதில் ஸ்ருதி ஹாசன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அது இந்த மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால் கொரோனா லாக் டவுன் போடப்பட்டுள்ள நிலையில், அது ரிலீஸ ஆகவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். கிராக் படத்தில் தயாரிப்பாளர் அளித்துள்ள பேட்டியில், ஷூட்டிங் முடிந்துவிட்டது ஆனால் இன்னும் ஐந்து முதல் ஆறு நாட்களுக்கான பேட்ச் ஒர்க் இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

லாக்டவுன் முடிந்து மீண்டும் அரசு ஷூட்டிங் நடத்த அனுமதித்தால் அது நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். கிராக் படம் ரிலீஸ் ஆகாததால் ஏமாற்றத்தில் இருக்கும் ரவி தேஜா ரசிகர்களுக்கு தமன்னா அவரது அடுத்த படத்தில் நடிக்க முடியாது என கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரவிதேஜாவும் தமன்னாவும் நல்ல நண்பர்கள் கூட. ஆனால், சம்பளத்தை காரணம் படத்தில் நடிக்க முடியாது என தமன்னா கூறியிருப்பது பல விதமான யூகங்களை தெலுங்கு சினிமா ஊடகங்கள் மத்தியில் கிளப்பி விட்டுள்ளன.

மறுபுறம் தமன்னா தற்போது நடித்து முடித்துள்ள பாலிவுட் படம் "போலே சுடியான்" படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. 

மேலும், நடிகை தமன்னா அடுத்து கன்னட சினிமாவிலும் கால் பதிக்கவுள்ளார். கேஜிஎப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் யாஷ் உடன் படு கவர்ச்சியாக அசைவுகளை வெளிப்படுத்தி ஆட்டம் போட்டிருப்பார். 

தற்போது, KGF யஷ்-ற்கு ஜோடியாக ஒரு படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது யஷ் கேஜிஎப் 2ம் பாகத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவரது அடுத்த படத்திற்கு தான் தமன்னா ஹீரோயினாக தேர்வாகியுள்ளாராம்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறுகிறார்கள். ரவி தேஜா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க 1.5 கோடி வரை கொடுக்க தயாரிப்பாளர் முன் வந்தும் 3 கோடி கொடுத்தால் நடிப்பேன் என்று தமன்னா கூறியுள்ள விஷயம் ரவிதேஜா ரசிகர்கள்களை ஷாக் ஆக்கியுள்ளது.

கோடிகளில் சம்பளம் கொடுத்தும் முன்னணி ஹீரோவுடன் நடிக்க முடியாது என மறுத்த தமன்னா..! - என்னவாம்..? கோடிகளில் சம்பளம் கொடுத்தும் முன்னணி ஹீரோவுடன் நடிக்க முடியாது என மறுத்த தமன்னா..! - என்னவாம்..? Reviewed by Tamizhakam on May 17, 2020 Rating: 5
Powered by Blogger.