இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்சியில் இறங்கியடிக்கும் பூனம் பாஜ்வா..! - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!


தமிழில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக "சேவல்" என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. 

எத்தனை நடிகைகள் வந்தாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார் பூனம் பாஜ்வா. பொதுவாக நடிகை கொழுக் மொழுக் என இருந்தாலே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். 

ஆனால், பல நடிகைகள் இது தெரியாமல் நானெல்லாம் எவ்ளோ ஃபிட்டான ஆளு தெரியுமா..? நானெல்லாம் பாலிவுட் பக்கம் போனா கான்கள் எல்லாம் என் காலடியில் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு உடல் எடை குறைகிறேன் பேர்வழி என்ற பெயரில் அநியாயத்துக்கும் உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறி விடுவார்கள்.

தாமிரபரணி பானுவில் இருந்து ஹன்ஷிகா, கீர்த்தி சுரேஷ் வரை உடல் எடை குறைத்தால் மார்கெட்டை இழந்து தடு மாறி வருகிறார்கள். ஆனால், அந்த தவறை செய்யாமல் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார் பூனம் பாஜ்வா. 

சமீபத்தில், இவர் நடிப்பில் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். சமூக வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் செய்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க தயார் டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார் அம்மணி. 

இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை ஒருநாளும் காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய அங்கங்கள் தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகள் அள்ளி வருகிறார் அம்மணி. இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் அம்மணி.

பிரபல OTT வலைத்தளமான நெட்ஃபிளிக்ஸ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் வெப் சீரிஸில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் பூனம் பாஜ்வா நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள்.

சினிமாவில் என்ன தான் கவர்ச்சி காட்டினாலும் சென்சாரில் வெட்டி தூக்கி போட்டு விடுகிறார்கள். கவர்ச்சி காட்டி நடித்தும் பயனில்லாமல் போய் விடுகிறது. ஆனால், வெப் தொடர்களில் சென்சார் என்ற ஒரு சமாசாரமே இல்லை. சொல்ல வந்ததை சொல்லலாம், பேச நினைத்ததை பேசலாம் என்பதால் நடிகைகள் பலரும் வெப் சீரிஸில் அதிகம் நாட்டம் காட்டுகிறார்கள்.

சம்பளமும் திரைப்படங்கள் ரேஞ்சுக்கு கிடைப்பது இன்னும் ஒரு ப்ளஸ் பாயிண்டாக உள்ளது. எதிர்காலத்தில், வெப் சீரிசிற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் பல இயக்குனர் வெப் சீரியல் நோக்கி பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்சியில் இறங்கியடிக்கும் பூனம் பாஜ்வா..! - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..! இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்சியில் இறங்கியடிக்கும் பூனம் பாஜ்வா..! - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 05, 2020 Rating: 5
Powered by Blogger.