நடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன காரணம்..?


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் சின்னத்திரை தயாரிப்பாளர். 

'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் 'நிறம் மாறாத பூக்கள்' சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார். 

தயாரிப்பு ஒருபக்கம் இருக்க, சீரியல்களில் பிஸியாக நடித்து வந்த நீலிமா திடீரென பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஹிட் சிரியலான "அரண்மனை கிழி" என்ற சீரியலில் இருந்து விலகி விட்டார். 

நடிகை நீலிமா ராணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் சீரியலில் நடித்த அஸ்வின் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

இந்த நிலையில், அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனை கிளி என்னும் சீரியலில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாகவும் நடித்து வருகிறார். தற்போது, தவிர்க்க முடியாத காரணங்களால் அரண்மனை கிளி சீரியலில் இருந்து விலகி கொள்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், அவரது வாழ்க்கையில் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன காரணம்..? நடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன காரணம்..? Reviewed by Tamizhakam on May 13, 2020 Rating: 5
Powered by Blogger.