தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்கள் - முன்னணி பத்திரிக்கை வெளியிட்ட பட்டியல்..!


ஒரு காலத்தில் கூரை கொட்டாயில் ஓடிக்கொண்டிருந்த தமிழ் சினிமா இன்று உலக தரத்தில் உயர்ந்து நிற்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்த கனவு உலகத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

தமிழ் சினிமா எல்லாம் யாருப்பா பாப்பாங்க... என்ற நிலை மாறியுள்ளது. ஒரு தமிழ் படம் இந்தியாவில் எவ்வளவு வசூல் செய்கிறதோ.. அதற்கு நிகராக இந்தியா நீங்கலாக உலகம் முழுதும் வசூல் செய்கிறது.

முக்கியமாக முன்னணி நடிகர்களின் படங்களில் ரிலீஸ் ஆகும் போது விடுமுறை நாட்கள் போலவும், ஒரு திருவிழா போலவும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். இந்த திருவிழாவில் பங்கேற்ற வெளிநாடுகளில் இருந்து கூட ரசிகர்கள் இந்தியா வருகிறார்கள்.

டீசர், பாடல் வெளியீடு, ட்ரெய்லர் வெளியீடு, படம், தொலைக்காட்சி பிரீமியர் என ஒரு படம் பல்வேறு வகைகளில் ரசிகர்களை கொண்டாடமான மனநிலைக்கு கொண்டு செல்கின்றது.

இந்நிலையில், இந்தியாவின் பழைய மற்றும் முன்னணி பத்திரிக்கை நிறுவனமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள டாப் 10 நடிகர் பட்டியலை இங்கே பார்க்கலாம்.


10.விஜய்சேதுபதி


வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் விஜய்சேதுபதி. சமீப காலமாக, தன்னுடைய தனிப்பட்ட அரசியல் மற்றும் மத விருப்பு வெறுப்புகளை உளறிவிட்டு சர்ச்சை வட்டத்துக்குள் வம்படியாக சென்று நின்று கொண்டார்.

09.சிவகார்த்திகேயன்


தொலைகாட்சியில் தொகுப்பாளராக மீடியா பயணத்தை தொடங்கிய இவர் இப்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் 9-ம் இடத்திற்கு வந்துள்ளார். இவருடைய படங்களுக்கு இளவட்டங்கள் தாண்டி குடும்ப ரசிகர்களும் உள்ளனர்.

08.விக்ரம்


அர்பணிப்பு, நடிப்பு என்றால் அது சியான் தான். சினிமாவுக்காக அப்படி கஷ்டப்படகூடியவர். வித்தியாசமான கதைகளங்களை தேர்வு செய்து நடித்தாலும் திரைக்கதையில் கோட்டை விட்டு விடும் இவர் ஒரு ஹிட் படத்துக்காக கடுனமாக முயற்சி செய்து வருகிறார்.

07.தனுஷ்


அறிமுகமான காலம் முதல் இப்போது வரை மாறாத குணம். படம் வேறு , வாழ்க்கை வேறு சர்ச்சையான படங்களில் நடித்தாலும் நிஜ வாழ்கையில் அது பற்றி பேசாமல் அமைதியாகவே இருந்து கொண்டு அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தும் நடிகர்.


06.சிம்பு


சிலம்பரசன். இவர் படமே ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் லைம் லைட்டில் இருக்க கூடிய ஒரு நபர். மற்ற நடிகர்கள் சர்ச்சைக்குள் இருப்பார்கள். இங்கே இவரே சர்ச்சையாக தான் இருக்கிறார். ஆனால், இவருக்கான ரசிகர் வட்டம் இன்னும் அப்படியே இருக்கிறது. இவருடைய இடத்தை பிடிக்க இன்னொரு நடிகர் இன்னும் வரவில்லை.

05.சூர்யா


படம் ஹிட்டோ, பிளாப்போ.. வருஷத்துக்கு ஒரு படம் கொடுத்து விடுகிறார். விஜய், அஜித்திற்கு அடுத்த படியாக அதிக அளவில் இள வட்டங்களை ரசிகர்களாக கொண்ட நடிகர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் "அயன்". அதன் பிறகு நடித்த படங்கள் பெருத்த எதிர்பார்ப்போடு வெளியாகி ரசிகர்களை ஏமாற்றும் விதமாகவே உள்ளது. சமீப காலமாக நானும் கருத்து சொல்றேன் பேர்வழி என்ற பெயரில் எதையாவது பேசி வம்பில் சிக்கிக்கொள்கிறார்.


04.கமல்ஹாசன்


உலக நாயகன். சினிமா, அரசியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் டிராப் ஆகி விட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், அதை பற்றி எந்த விளக்கமும் கூறாமல் முழு நேர அரசியல் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.


03.அஜித்


தல. வாழு, வாழ விடு.. என தனிக்காட்டு ராஜாவாக வீறுநடை போட்டு வரும் நடிகர். சமீப காலமாக உடல் நலத்தில் சிறிது அக்கறை எடுத்துக்கொண்டு படங்களை மெதுவாக நகர்த்திக்கொண்டிருகிறார்.

02.விஜய்


தளபதி. வயசு தான் 45. ஆனால், 18 வயசு பையன் போல துருதுருவென இளமை துடிப்புடன் நடித்து வருகிறார். தமிழகம் தாண்டி கேரளாவிளும் இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. இவரது படங்களுக்கு மினிமம் கியாரண்டி உள்ளதால் படம் ப்ளாப் என்றால் போட்ட காசு கைக்கு வந்து விடும். அல்லது பெரிய நட்டம் இருக்காது என்ற நிலை உள்ளது. காரணம், பெரு வாரியான குடும்ப பெண்கள் தளபதியின் ரசிகைகள் தான். படம் வெளியாகி ஒரு வாரம் ஆன பின்பு குடும்ப ரசிகர்களின் கூட்டம் அரங்கை நிரம்பும்.

01.ரஜினிகாந்த்


தலைவர். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது அரசியல் களத்திலும் காலை வைத்து விட்டார். மாற்று வேண்டும்.. மாற்று வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் ஆள் மாறினால் மட்டும் போதாது அரசியல் கட்டமைப்பே மாற்றப்பட வேண்டும் என்ற கொள்கை ஒரு பக்கம்.

இலவசங்களை நம்பி, காசுக்கு ஓட்டு போடும் மக்கள், எதுக்கு ஓட்டு போடுகிறோம் என்றே தெரியாமல் இருக்கும் ஒரு தரப்பு மக்கள். இவர்களை நம்பிக்கொண்டு தன்னை நம்பி அரசியலுக்கு வருவோரை நடுத்தெருவில் நிறுத்திவிடுவோமோ..? என்ற ஒரு பயம் மறுபக்கம் என மதில் மேல் பூனையாய் அமைதியாய் நிற்கிறார் மனுஷன்.

தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்கள் - முன்னணி பத்திரிக்கை வெளியிட்ட பட்டியல்..! தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்கள் - முன்னணி பத்திரிக்கை வெளியிட்ட பட்டியல்..! Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.