"14 வயதிலேயே இதற்கு நான் ஆளானேன் - அந்த வலி கொடுமையானது.." - வெளிப்படையாக கூறிய மாளவிகா மோகனன்..!


நடிகை மாளவிகா மோகனன் தான் தற்போதயை தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையும், நம்பிக்கை நட்சத்திரமும். இவர் நடிப்பில் மாஸ்டர் படத்தை அவர் மிகவும் நம்பி இருக்கின்றார். எப்படியும் விஜய் படம் அதனால் கண்டிப்பாக பெரிய மார்க்கெட் தமிழில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இதனால் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டும் என்தால் விரைவில் முன்னணி நடிகை என்ற வட்டத்திற்குள் வந்துவிடலாம் எனவும் கூறுகிறார்கள்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு விஷயத்தை ஷேர் செய்துள்ளார், இதை படித்த பலருக்கும் ஷாக் தான்.

அவர் கூறியுள்ளதாவது,  என்னுடைய 14 வயதில் நான் நிறவெறிக்கு ஆளானேன், ஒரு மகாராஷ்டிரா பெண்மணி தன் மகனிடம் நீ நிறைய டீ குடிக்காதே. அப்படி குடித்தால் இவளை போல் கருப்பாக ஆகிவிடுவாய் என என்னை சுட்டிக்காட்டி காட்டினார். அப்போது, நான் மிகவும் மனம் வேதனை அடைந்தேன். அந்த வலி மிகவும் கொடுமையாக இருந்தது.

நீங்கள் எவ்வளவு குணமானவர் என்பது தான் உங்களது தகுதியே தவிர, வண்ணம் அல்ல என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்களிடம் பெரும் ஆறுதல் மற்றும் ஆதரவும் மாளவிகாவிற்கு கிடைத்து வருகிறது.

"14 வயதிலேயே இதற்கு நான் ஆளானேன் - அந்த வலி கொடுமையானது.." - வெளிப்படையாக கூறிய மாளவிகா மோகனன்..! "14 வயதிலேயே இதற்கு நான் ஆளானேன் - அந்த வலி கொடுமையானது.." - வெளிப்படையாக கூறிய மாளவிகா மோகனன்..! Reviewed by Tamizhakam on June 03, 2020 Rating: 5
Powered by Blogger.